மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இலங்கை வங்கி சங்கம் மற்றும் தொழிற் சங்கங்கள் ஒன்றினைந்து கோட்ட வீட்டுக்கு போ என்ற தொனிப் பொருளில் இன்று (20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்க வங்கி சங்கம் நாடளாவிய ரீதியில் ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து மட்டக்களப்பு சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று புதன்கிழமை காந்தி பூங்காவில் அஞ்சல் தொலைத் தொடர்பு சேவையாளர் சங்கம், பொற்றோலிய கூட்டுதாபன சங்கம் உட்பட தொழிற் சங்கங்களை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் பகல் 12.30 மணிக்கு ஒன்றிணைந்து அரச வங்கிகளில் மேற்கொள்ளப்படும் அரசியல் அழுத்தங்களை நிறுத்து, வாழ்க்கை செலவை குறைத்திடு, மருந்து பொருட்கள், மின்சாரம், எரிபொருள், பால்மா என்பவற்றை தடையின்றி வழங்கு,
ஊழல் ஊடாக சம்பாதித்த பணத்தை மக்கள் உடமையாக்கு, விவசாயிகள், மீனவர்கள், சிறு வணிகர்களுக்கு நிவாரணம் வழங்கு, கோட்டா வீட்டுக்கு போன்ற பல வாசகங்கள் கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷமிட்டுடவாறு சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட ஆர்பாட்டகார்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.