புதுமண தம்பதிகளுக்கான மனேத்தத்துவ நிபுணர்களின் அழகான 20 உபதேசங்கள்

1:கணவன்/மனைவி ஒருவருக்கொருவர் காதல் கொண்டிருந்தாலும் பணம் இல்லையேல் உங்கள் இல்லற வாழ்வில் மகிழ்ச்சி இல்லை, அடுத்து ஒரு ஐந்து வருடத்திற்கு என பணத்தை சேமித்து வைக்க புருசன் பொண்டாட்டி இருவரும் சேர்ந்தே திட்டம் வகுத்திடுங்கள்,

2: நானே பெரியவன் நானே ஆண்மகன்/சிறந்தவன், நான் படித்தவள் எனக்கு எல்லாம் தெரியும் என்ற அகந்தையை விடுங்கள், மனைவியிடம் தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள், உங்கள் கணவர் உங்களுக்காக பிறந்தவர் அவரிடம் தோற்றுப்போவதில் எந்த தவறுமில்லை,

3: அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக் கொண்டிருப்பதை விடுங்கள், உங்கள் கணவன் அல்லது மனைவியின் பேச்சையும் கூர்ந்து கவனியுங்கள், அப்போதுதான் அவர்களின் குணம் என்னவென்று உங்களுக்கு தெரியவரும்,

4: உங்களுக்கிடையே அதிகமாக பரிசு கொடுத்துக்கொள்ளுங்கள், அந்த பரிசின் நினைவுகள் உங்களை விட்டு நீங்காது, அவர்கள் உங்களை அதிகமாக தேடிடுவர், அது உங்களின் காதலை மேலும் அதிகரிக்கத்தான் செய்யும்,

5:. எந்த விஷயத்தையும் பிரச்சனையையும் நாசுக்காகக் கையாளுங்கள், உங்கள் துணையிடம் குரலை உயர்த்தி பேசாதீர்கள், தவறு யாரிடம் இருந்தாலும் முதலில் நீங்களே மண்ணிப்பு கேட்டு விட்டுக்கொடுங்கள்,

6: மண வாழ்க்கையில் சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும், நான் சொன்னதுதான் சரி என்று வீண் வாதம் செய்யாதீர்கள், உங்கள் கணவனுக்கு/மனைவிக்கு பிடிக்காத ஒன்றை செய்யவேண்டும் என்று ஒருநாளும் நினைக்காதீர்கள், அது உங்களிடையே பிரச்சினையைதான் அதிகம் தூண்டும்,

7: உண்மை எது? பொய் எது?’ என்று தெரியாமல் இங்கே அங்கே என அடுத்தவர் சொல்லியதை, கேட்டதை, கொண்டு உங்கள் துணையை நீங்களே மட்டம் தாழ்த்தாதீர்கள், “சரி விடுமா” என்றும் “பரவாயில்லை விடுங்க” என்றும் சொல்லிப் பழகுங்கள் அது உங்களிடையே உங்களின் காதலை அதிகரிக்க செய்யும்,

8: புதுமண தம்பதிகளான உங்களுக்கு மண வாழ்க்கை திருப்தி இல்லாத, அல்லது இன்னும் கல்யாணம் ஆகாதவர் உங்கள் மீதும் அல்லது உங்களின் வாழ்க்கை மீதும் பொறாமை படக்கூடும், அதாவது கண்ணுப்படும். சில விஷயங்களில் பெரியோர்களின் சொல்ப்படி கேட்டு நடப்பதும் மிகவும் அவசியம், இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று பெரியோர்களை உதாசிணப்படுத்திவிடாதீர்கள், அவர்களின் ஆசியில்தான் நீங்கள் கணவன் மனைவியாக இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்,

9: பணத்தை வீண் விரயம் செய்யாதீர்கள், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசை கொள்ளாதீர்கள், உண்மையில் ஆடம்பரமாக வாழ்கிறவர்கள் பலரும் தங்களுடைய இல்லற வாழ்க்கையில் சந்தோஷமாக வாழ்வதில்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள்,

10: எல்லோரிடமும் உங்கள் வாழ்க்கையின் எல்லா விஷயங்களையும், சொல்லிக் கொண்டிருக்காதீர்கள், உங்கள் துணையை நீங்கள் கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் உடனே அதை நம்பியும் விடாதீர்கள்,

11. நீங்கள் இருவரும் இனி உங்களுக்காக வாழப்போகிறீர்கள் ஆதலால் அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள், ஒருவருக்கொருவர் சின்ன சின்ன காதல் சீண்டல்கள் மூலம் உங்கள் துணையை நீங்களே சிரிக்க வையுங்கள்,

12. உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல், உங்கள் துணையின் கருத்துக்களையும் யோசனைகளையும் கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள்,

13. உங்களுக்கு கல்யாணமாகிவிட்டது நீங்கள் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்கிறீர்கள், ஆதலால் செல்லும் இடத்தில் மரியாதையை கொடுத்து மரியாதையை பெற்று, இனிய இதமான சொற்களை கொண்டு பேச பழகிக்கொள்ளுங்கள்,

14. புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்துக் கொள்ளாதீர்கள்,

15. பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும் தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள். நிறைய பெண்களுக்கு அளவோடு பேசும் ஆண்களைதான் பிடிக்கும்,

16. உங்கள் கணவருக்கு அல்லது மனைவிக்கு பிடித்தவை எவை என தேடுங்கள், அதை தெரிந்துகொண்டு அவ்வப்போது அவர்களுக்கு சர்பிரஸ் கொடுத்துவிடுங்கள்,

17. பிரச்சனைகள் ஏற்படும் போது அவள்/அவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள், முடிந்த வரை பிரச்சினையை முடிக்க முயற்சி செய்யுங்கள்,

ஏனெனில் இங்கே நிறைய பேருக்கு அவர்கள் ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைத்துவிடும், ஆனால் கிடைத்த அந்த வாழ்க்கையைதான் அவர்களுக்கு தக்கவைத்துக்கொள்ள தெரிவதில்லை, அந்த தவறை நீங்களும் செய்துவிடாதீர்கள்,

18. முடிந்த அளவில் குடும்ப செலவைக் குறையுங்கள். முடிந்த அளவில் சேமிப்பை அதிகப்படுத்துங்கள்,

19. குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றி முதலில் நீங்கள் ஒரு முடிவுக்கு வாருங்கள், நிறைய கல்யாணமானவர்கள் அவசரப்பட்டு குழந்தை பெற்றுக்கொண்டோம் என்று புலம்புவதை நீங்கள் கேட்டுருப்பீர்கள்,

20: உங்கள் துணை உங்களுக்காக இவ்வுலகில் பிறந்தவர்கள், அவர்களின் கட்டில் ஆசைகளையும், தேவைகளையும், நீங்கள்தான் பூர்த்தி செய்து அவர்களை முழுமையாக கட்டிலில் திருப்திப்படுத்த வேண்டும், திருப்தி இல்லா கட்டில் வாழ்க்கைதான் பல கள்ளக்காதலை உருவாக்குகிறது, உங்கள் ஆசை, உங்கள் சக்தி, உங்கள் காதலை, உங்களின் உரிமையுள்ள ஒரு உறவோடு இன்பத்தை கட்டிலில் காட்டி நிரூபியுங்கள்.

#வாழ்க #வளமுடன்
#writer #காதல் #கல்யாணம் #காமம் #கணவன் #மனைவி #வாழ்க்கை

Leave a Reply

Your email address will not be published.