தொலைபேசியும் சிறுவர்களும்

தொலைபேசிகளில் அதிகளவு நேரம் செலவழிக்கும் சிறுவர்கள் நினைவாற்றல் மற்றும் பிற திறன்கள் சிறிதாக குறைந்து போகும் நிலை உருவாகிறது.

இப் பதிவு வெறும் சிறுவர்களைப் பற்றியது மட்டுமல்ல, சிறு வயதிலிருந்தே தங்கள் குழந்தைகளை தொலைபேசி பாவனையை பழக்கும் பெற்றோர்களைப் பற்றியும் விளக்குகிறது. பெரியோர்களாலே அதிலிருந்து விடுபட்டு இருப்பது மிகவும் கடினமான சூழ்நிலையில் குழந்தைகள் எம்மாத்திரம்.

உங்கள் குழந்தைகளின் கைபேசி பயன்பாட்டு நேரத்தை குறைக்க முயற்சிக்கும் போது, நீங்கள் அவர்களிடம் இருந்து கோபத்தை எதிர்கொள்ள நேரிடும். எனவே, பெற்றோர்கள் தங்கள் திரை நேரத்தை முதலில் குறைக்க வேண்டும்.
உங்கள் குழந்தையின் தொலைபேசி பார்க்கும் நேரத்தை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டியதற்கான சில முக்கிய காரணங்கள் .

ஆதீத கையடக்க தொலைபேசி பாவனை மூளையில் பாதிப்பை உண்டு பண்ணுவதோடு கவனச்சிதறல் அதிகரிக்கும் . குழந்தை பருவமானது நினைவகம் மற்றும் மூளை கலங்களை வலுப்படுத்தும் வளர்ச்சி செயல்பாட்டில் ஒரு முக்கிய கட்டமாகும். இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமானால் அதிகமான கவனச்சிதறல்கள் அல்லது குழப்பமான சூழ்நிலை இருக்கும் போது நினைவுகளை நிலைநிறுத்துவது மூளைக்கு கடினமாக இருக்கலாம்.

அப்படியானால் குழந்தைகள் நவீன வகை கையடக்க உபயோகிக்கும் போது, பெற்றோர் அல்லது ஆசிரியரின் அறிவுறுத்தல்களை முற்றிலும் தவிர்த்து விடுகின்றனர். குழந்தைகள் எந்தவொரு திறமையையும் கற்றுக்கொள்வதில் அல்லது திறனைத் தழுவுவதில் ஆழமற்ற முயற்சியைக் கொடுப்பதால் அவர்களின் மூளை வளர்ச்சி செயல்முறை ஆபத்தில் முடிகிறது.

தொடுதிரையில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் கண்களுக்கு மட்டுமல்ல, மூளை கலங்களுக்கு தீங்கு விளைவிக்கும். நீல ஒளி மூளையின் நினைவக திறனை பாதிக்கிறது. குறுகிய கால நினைவகத்தில் குறுக்கிடுகிறது.

இதனால் குழந்தைகள் ஏதேனும் ஒரு விடயத்தில் கவனம் செலுத்துவது கடினமாகும். குறிப்பாக இரவில் மிக தாமதமாக யாராவது தொலைபேசியைப் பயன்படுத்தும் போது, ​​உங்கள் மூளை இது பகல் நேரம் என்று நம்புகிறது.

இவ்வாறு நிகழும்போது, உங்கள் ​​உடல், தூக்க சுரப்பான மெலடோனின் உற்பத்தியை நிறுத்துகிறது. இதன் விளைவாக, ஒரு நபர் தூக்கமில்லாமல் இருப்பார். மறுநாள் சோர்வடைவார். மேலும் எந்த ஒரு பணியையும் முழுவீச்சுடன் அவரால் செய்து முடிக்க இயலாது.

முன்பெல்லாம் படித்த விடயங்களை நியாபகம் வைத்துக்கொள்ள எதிலாவது எழுதி வைத்துக்கொள்வோம். அதன் மூலம், அந்த விடயங்கள் மனதில் நிலைத்து நிற்கும். ஆனால் இப்போது ஒரு விடயத்தை நினைவில் வைத்துக்கொள்ள மாணவர்கள் நவின சாதனத்தை உபயோகித்து வருகின்றனர்.

அதனை கட்டாயம் மனதில் வைத்துக்கொள்வது கடினம் இதுவே நவின மறதி என்று கூறப்படுகிறது. இது உருவ நினைவகத்தில் குறிப்பாக வடிவங்கள் மற்றும் புள்ளிவிவரங்களை அங்கீகரிக்கும் மூளை பகுதியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

சமூக ஊடகங்களில் ஒவ்வொரு செயல்பாட்டின் படங்களையும் பதிவேற்றுவதில் அதிக கவனம் செலுத்துவதால், ஒரு இளைஞன் நவின சாதனங்களில் ஒவ்வொரு விவரத்தையும் பதிவுசெய்கிறான். அந்தத் தகவல் நீண்டகால நினைவகத்தில் சேமிக்கப்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும் ஒரு நிகழ்வை சரியாக ஞாபகம் வைத்துக்கொள்வதில் இருந்து குழந்தைகளை திசைதிருப்பவும் செய்கிறது.

எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திரை நேரத்தை அதாவது தொலைபேசி மற்றும் நவின சாதனங்களை பயன்படுத்தும் நேரத்தை காட்டாயம் குறைக்க வேண்டும்.

நீங்கள் இனி செய்யவேண்டியது இதுதான்….

உங்கள் குழந்தை தொலைபேசியில் எவ்வளவு நேரம் பேசுகிறார்கள், போனை தங்களின் காதுக்கு எவ்வளவு அருகில் வைத்திருக்கிறார்கள், தொலைபேசிகள் மற்றும் நவின சாதனங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உங்கள் குழந்தைகளிடம் நட்பான முறையில் எடுத்துரைக்க வேண்டும்.

நிகழ்நிலை வகுப்புகள் தவிர, மற்ற நேரங்களில் உடல் செயல்பாடு சார்ந்த விளையாட்டுக்கள் அல்லது வீட்டு வேலைகளில் தங்களை ஈடுபடுத்துகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அலைபேசி பயன்படுத்தும் போது, ​​குழந்தைகள் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடமிருந்து தங்கள் கண்களைப் பாதுகாக்க சோர்வு எதிர்ப்பு கண்ணாடிகளை அணிய வேண்டும்.

காதுகளுக்கு அருகில் தொலைபேசியை வைத்து பேசுவதை தவிர்ப்பது அல்லது காதுசெருகி பயன்பாட்டைத் தவிர்ப்பது போன்ற யோசனையை ஊக்குவிக்கவும். இதனால் கதிர்வீச்சுகளில் இருந்து அவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

படுக்கை நேரத்தில் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகளை பயன்படுத்த கட்டாயம் அனுமதிக்கக்கூடாது.

Leave a Reply

Your email address will not be published.