இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு நாணய இயலுமையை தரமிறக்கியது ஸ்டான்ட் அன்ட் புவர்ஸ் நிறுவனம்

ஸ்டான்ட் அன்ட் புவர்ஸ் நிறுவனமானது இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு நாணயத்தின் தரத்தை ‘சிசிசி’ நிலையிலிருந்து ‘சிசி’ நிலைக்குத் தரமிறக்கியிருப்பதுடன், நீண்டகால உள்நாட்டு நாணயத்தின் தரத்தை ‘சிசிசி’ நிலையிலிருந்து ‘சிசிசி -‘ நிலைக்குத் தரமிறக்கியுள்ளது.

அதேவேளை குறுங்கால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயத்தின் தரம் ‘சி’ நிலையிலேயே மீண்டும் இருப்பதை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியிருப்பதுடன், பரிமாற்று மற்றும் நாணயமாற்று மதிப்பீட்டை ‘சிசிசி’ நிலையிலிருந்து ‘சிசி’ நிலைக்குத் தரமிறக்கியுள்ளது.

இவற்றின் தரப்படுத்தலில் வெளிப்பட்டுள்ள நேர்மறையான போக்கு, இலங்கையின் பொருளாதாரம் வர்த்தகக்கடன் மீள்செலுத்துகையில் அச்சுறுத்தலான மட்டத்தில் இருப்பதைக் காண்பிப்பதாக ஸ்டான்ட் அன்ட் புவர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெருமளவான வெளிநாட்டுக்கடன்களை மீளச்செலுத்தவேண்டியுள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் வெளிநாட்டுக்கடன் மீள்செலுத்துகையைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதாகக் கடந்த 12 ஆம் திகதி அரசாங்கம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.